Enable Javscript for better performance
பேருந்துகள் இயங்கத் தொடங்கின- Dinamani

சுடச்சுட

    

    பொறையாறு பணிமனை கட்டட விபத்தில் 8 பேர் உயிரிழந்ததன் காரணமாக, வெள்ளிக்கிழமை காலை முதல் தடைபட்டிருந்த பொறையாறு பணிமனைக்குள்பட்ட அரசுப் பேருந்துகளின் இயக்கம் சனிக்கிழமை தொடங்கியது.
    பொறையாறு அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை கட்டடத்தின் மேற்கூரை மற்றும் முதல்தளம் வெள்ளிக்கிழமை அதிகாலை இடிந்து விழுந்த விபத்தில், போக்குவரத்து ஊழியர்கள் 8 பேர் உயிரிழந்தனர்.
    இதன் காரணமாக, பொறையாறு பணிமனை பிரிவுக்குள்பட்ட ஓட்டுநர்கள், நடத்துநர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர்.
    இதனால், பொறையாறு பணிமனையிலிருந்து இயக்கப்படும் 32 பேருந்துகளின் இயக்கமும் வெள்ளிக்கிழமை காலை முதல் தடைபட்டிருந்தது.  
    பெரும்பாலான ஊழியர்கள் சனிக்கிழமை பகல் நேரத்தில் பணிக்குத் திரும்பத் தொடங்கியதைத் தொடர்ந்து, சனிக்கிழமை பிற்பகல் முதல் இப்பணிமனை மூலம் இயக்கப்படும் பேருந்துகளின் போக்குவரத்துத் தொடங்கியது. சனிக்கிழமை பிற்பகலில் சுமார் 29 பேருந்துகள் இயக்கப்பட்டதாக தெரிகிறது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai