சீர்காழி அருகே மாதானத்தில் ஒரு குட்டையில் பச்சிளம் பெண் குழந்தை சடலமாக திங்கள்கிழமை மீட்கப்பட்டார்.
மாதானம் வடபாதி பகுதியில் உள்ள அப்பாபிள்ளை குட்டையில் பிறந்து சில நாள்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை அழுகிய நிலையில் சடலமாக மிதந்தது. தகவலின்பேரில், புதுப்பட்டினம் காவல் நிலைய போலீஸார் அங்கு சென்று குழந்தையின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.