மயிலாடுதுறை அருகே வில்லியநல்லூரில் உள்ள மல்லியக்கொல்லை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நிர்வாகிகள் திங்கள்கிழமை பொறுப்பேற்று கொண்டனர்.
சங்கச் செயலர் ஜி. அன்பழகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தலைவராக வி. பழனிசாமி, துணைத் தலைவராக டி. ராமதாஸ், சங்க உறுப்பினர்களாக யு. வேல்முருகன், ஆர். சாந்தி, ஆர். வீரமணி, எஸ். கருணாநிதி, எம். யுவராஜா, ஜி. பாஸ்கரன், பி. குமார், எஸ். சித்ரா, இ. சசிகலாஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.