வேதாரண்யம் புதிய வட்டாட்சியராக மா. ஸ்ரீதர் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர், இதற்கு முன்பு தரங்கம்பாடி வட்டாட்சியராக பணியாற்றினார். வேதாரண்யத்தில் வட்டாட்சியராக ஏற்கெனவே பணியாற்றிய இரா. சங்கர், சீர்காழி வட்டாட்சியராக விருப்ப பணி மாறுதலில் செல்கிறார். முன்னதாக பணி மாறுதலில் செல்லும் வட்டாட்சியர் ஆர். சங்கருக்கு பாராட்டு மற்றும் பிரிவு உபச்சாரவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில், மண்டல துணை வட்டாட்சியர் ரமேஷ், துணை வட்டாட்சியர்கள் ராசா, வட்ட வழங்கல் அலுவலர் ஜெயசீலன், கிராம நிர்வாக அலுவலர் சங்கத் தலைவர் ரெங்கராஜன், மாவட்டத் தலைவர் ராசேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.