சீர்காழியில் மறைந்த அதிமுக பிரமுகர் ரமேஷ்பாபுவின் நினைவேந்தர் மற்றும் புகழஞ்சலி நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
சீர்காழி தென்பாதி சங்கர் நகரில் நடைபெற்ற புகழஞ்சலி நிகழ்ச்சிக்கு சீர்காழி எம்எல்ஏ பி.வி. பாரதி தலைமை வகித்தார். மயிலாடுதுறை எம்.எல்.ஏ ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் ரெங்கநாதன், சக்தி, ஒன்றிய செயலர்கள் ஜெய. ராஜமாணிக்கம் (சீர்காழி), கே.எம். நற்குணன்(கொள்ளிடம்), நகரச் செயலர் அ. பக்கிரிசாமி, பேரவைச் செயலர் ஏவி. மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் பங்கேற்று மறைந்த ரமேஷ்பாபுவின் திருவுருவபடத்தை திறந்துவைத்து மலர் தூவி மவுனஅஞ்சலி செலுத்தினார்.
இதில் ரமேஷ்பாபுவின் சகோதரர் எல். சீனிவாசன் மற்றும் அவரது குடும்பத்தினர்கள், அதிமுக மாவட்ட பொருளாளர் வா.செல்லையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.