சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் திருப்பனந்தாள் எஜமான் சுவாமிகள் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்தார்.
வைத்தீஸ்வரன்கோயிலில் தையல்நாயகிஅம்மன் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு திருப்பனந்தாள் காசிமட அதிபர் எஜமான் சுவாமிகள் வருகை தந்தார். பின்னர் கற்பக விநாயகர், வைத்தியநாதசுவாமி, தையல்நாயகி அம்மன், செல்வமுத்துக்குமார சுவாமி, நவகிரகங்களில் செவ்வாய்க்குரிய அதிபதி அங்காரகன் ஆகிய சுவாமிகளின் சன்னிதிகளில் வழிபட்டார். அப்போது, வைத்தீஸ்வரன்கோயில் கட்டளை விசாரணை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்டோர் உடனிருந்தார் .