சீர்காழி சட்டைநாதர் கோயிலில் திங்கள்கிழமை அம்மனுக்கு ஆடிப்பூர திருக்கல்யாணம் உத்ஸவம் நடைபெற்றது.
சீர்காழியில் உள்ள தருமபுரம் ஆதினத்துக்குச் சொந்தமான திருநிலைநாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி கோயிலில் ஆடிப்பூரத்தையொட்டி திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக, அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் சுவாமி -அம்மன் எழுந்தருளினர். தொடர்ந்து, வேதவிற்பன்னர்கள் மந்திரங்கள்முழங்கி சிறப்பு ஹோமம் நடத்தினர். பிறகு, திருமணசடங்குகள் நடைபெற்று சிவாச்சாரியார் மங்கலநாணை அம்மன் கழுத்தில் அணிவித்து திருக் கல்யாணம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.