நாகை மாவட்டம், குத்தாலம் அருகேயுள்ள மங்கைநல்லூரில் படுக்கை அணை மற்றும் மதகு மறு கட்டுமானப் பணி புதன்கிழமை தொடங்கியது.
நீர் மற்றும் நிலவளத் திட்டத்தின் கீழ் ரூ. 9 கோடி மதிப்பில் வீரசோழனாற்றின் குறுக்கே படுக்கை அணை மற்றும் 3 கி.மீட்டர் தொலைவு தலைப்பு மதகு மறுகட்டுமானப் பணியை பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். பவுன்ராஜ் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்த அணையின் மூலம் 283 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.
பணி தொடக்க நிகழ்ச்சியில் குத்தாலம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் என். தமிழரசன், அவைத் தலைவர் அரிராமன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் சண்முகம், இளங்கோவன், ரமேஷ், உதவி செயற்பொறியாளர் வி. சண்முகம், உதவி பொறியாளர் ஆர். சுப்பிரமணியன், பாசன ஆய்வாளர் வி.வேதபுரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.