புயல் பாதிப்பு: அரசு ஊழியர் சங்கம் மூலம் ரூ. 12 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் அளிப்பு

கஜா புயலால் சேதமடைந்த நாகை மாவட்டம், வேதாரண்யம் மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மற்றும்

கஜா புயலால் சேதமடைந்த நாகை மாவட்டம், வேதாரண்யம் மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மற்றும் அரசுத் துறை ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ரூ. 12 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன. 
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக, வட சென்னை, தென் சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை, கரூர், காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர் மற்றும் கடலூர்  மாவட்டங்களில், அரசு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு, நிவாரணப் பொருள்கள் சேகரிக்கப்பட்டன.
சுமார் ரூ. 12 லட்சம் மதிப்பில் சேகரிக்கப்பட்ட அந்த நிவாரணப் பொருள்கள், நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ள எல்லாரெட்டி குத்தகை, பழைய அகரம் ஆகிய கிராமங்களில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், வேதாரண்யத்தில் புயல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு அரசுத் துறைகளின் ஊழியர்களுக்கும் வழங்கப்பட்டன. 
அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் மு. சுப்பிரமணியன், மாநிலப் பொருளாளர் எம். தங்கராஜ், மாநிலத் துணைத் தலைவர் எஸ்.பார்த்திபன், நில அளவை ஒன்றிப்பு மாநிலத் தலைவர் ரெ. காயாம்பு, சத்துணவு ஊழியர் சங்க மாநில நிர்வாகிகள் ஆர்.நூர்ஜகான், கே.சக்தி, அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ப. அந்துவன் சேரல், மாவட்டச் செயலாளர் ஏ.டி. அன்பழகன் மற்றும் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள்  நிவாரணப் பொருள்களை விநியோகித்தனர்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com