Enable Javscript for better performance
அங்காளம்மன் கோயிலில் மகா சிவராத்திரி உத்ஸவம் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    அங்காளம்மன் கோயிலில் மகா சிவராத்திரி உத்ஸவம் தொடக்கம்

    By DIN  |   Published on : 09th February 2018 02:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சீர்காழி தென்பாதியில் உள்ள ஸ்ரீராஜராஜேஸ்வரி என்கிற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் மகாசிவராத்திரியையொட்டி, வியாழக்கிழமை காப்புகட்டி, கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.
    இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் சிவாராத்திரி விழாவையொட்டி உத்ஸவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு உத்ஸவம் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, விக்னேஸ்வரர் பூஜை, அம்மன் எதாஸ்தானம் பெயருதல் ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து, நாகேஸ்வரமுடையார் கோயிலிருந்து அலகு காவடிகள், ரத காவடிகள் எடுத்துக்கொண்டு திரளான பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோயிலை வந்தடைந்தனர்.
    பின்னர் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. விழாவின், முக்கிய நிகழ்ச்சியான அம்மன் பேச்சி ரூபத்தில் எழுந்தருளி மயானசூறை பிப்.13-ஆம் தேதி சிவராத்திரி விழா அன்று நடைபெறுகிறது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai