Enable Javscript for better performance
அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வை அமல்படுத்த வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வை அமல்படுத்த வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 09th February 2018 02:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரசு ஊழியர்களுக்கு அறிவித்த ஊதிய உயர்வை அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு கிராம ஊராட்சி பணியாளர்கள் சங்கம் (ஏஐடியுசி) வலியுறுத்தியுள்ளது.
    நீடாமங்கலத்தில் புதன்கிழமை நடைபெற்ற சங்க கூட்டத்தில், அரசு ஊழியர்களுக்கு அரசு அறிவித்த ஊதிய உயர்வை உடனடியாக அமல்படுத்த வேண்டும், இக்கோரிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.23-ஆம் தேதி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் நீடாமங்கலம் ஒன்றியத்திலிருந்து திரளாக பங்கேற்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    சங்க ஒன்றியத் துணைத் தலைவர் பி. தங்கராசு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்டச் செயலர் ஏ. தங்கவேல் , மாவட்டத் தலைவர் பி. சாந்தகுமார், ஒன்றியச் செயலர் ஜி. ரவி, ஒன்றிய துணைச் செயலர் ஏ. ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai