Enable Javscript for better performance
இன்றளவும் கிராக்கி நிலவும் வைக்கோல்கே.கோதண்டராமன்- Dinamani

சுடச்சுட

    

    நெல் அறுவடைக்குப் பிறகு கிடைக்கும் தாளான வைக்கோலுக்கு கிராக்கி நிலவுகிறது.
    அடி காட்டுக்கு, நடு மாட்டுக்கு, நுனி வீட்டுக்கு என்று இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அடிக்கடி கூறுவதுண்டு. இந்த நடு என்பது வைக்கோலை குறிக்கும். அந்த வைக்கோலுக்குத்தான் தற்போது விவசாயிகள் மத்தியில் கிராக்கி நிலவி வருகிறது.
    திருவாரூர் மாவட்டத்தில், கடந்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஓரளவு சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் சாகுபடி நிகழாண்டு நடைபெற்றது. பல்வேறு இயற்கை இடர்பாடுகளுக்கு மத்தியில் இந்த சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. தற்போது குடவாசல், கொரடாச்சேரி வட்டங்களில் நெல் அறுவடை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
    இந்நிலையில், அறுவடைக்குப் பிறகு வயலிலிருந்து கிடைக்கும் நெற்கதிரின் நடுப் பகுதியான வைக்கோல் வாங்குவதற்கு விவசாயிகள் போட்டியிட்டு வருகின்றனர்.
    இதுகுறித்து குடவாசல் வட்டம், அரசவனங்காடு பகுதியைச் சேர்ந்த விவசாயி ஆர். ராதாகிருஷ்ணன் கூறியது:
    நாட்டு இன மாடுகளுக்கு உகந்த உணவாக வைக்கோல் விளங்கி வருகிறது. முன்பெல்லாம் நெல் அறுவடை முடிந்தபிறகு கிடைக்கும் வைக்கோலை ஆட்களைக்கொண்டு வீட்டுக்கொல்லைப்புறத்தில் பெரிய அளவில் குவித்து வைத்து மேய்ச்சலுக்குப் போகாத நிலையில், கால்நடைகளுக்கு உணவாக கொடுக்கப்படும். இது தவிர கூறை வீடுகளில் மேற்கூரைக்கு கூடுதல் பாதுகாப்பாகவும் வைக்கோலை பயன்படுத்துவார்கள். ஆனால், கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக எங்கள் பகுதியில் விவசாயம் என்பது நடைபெறவில்லை.
    இந்நிலையில் நிகழாண்டு, சம்பா நெல் சாகுபடி செய்தோம். தற்போது எங்கள் பகுதியில் அறுவடைப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ஆட்கள் பற்றாக்குறை காரணமாக இயந்திரங்களைக் கொண்டு நெல் அறுவடைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அறுவடைக்குப் பின், நெற்கதிரின் நடுப்பகுதியான வைக்கோலை சேமித்து வருகிறோம். கடந்த 5 ஆண்டுகளில் நெல் சாகுபடி இல்லாததால் கால்நடைகளுக்கு உணவாக வைக்கோல் வழங்க முடியவில்லை. நாட்டின மாடுகள் வைக்கோலை விரும்பி உண்ணும்.
    எனவே, இப்போது வைக்கோலை சேகரிக்கும் வேலையிலும் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். அறுவடை செய்த வயல்களில் வைக்கோல்களைச் சேகரித்து, தங்களது மாடுகளுக்கு போக மீதியை மற்ற விவசாயிகளிடம் விற்பனையும் செய்து வருகின்றோம். இதற்கும் இப்போது கிராக்கி நிலவுகிறது இதனால் வைக்கோலின் விலையும் அதிகரித்துள்ளது என்றார்.
    மறைந்துபோன வைக்கோலைப் போர் குவியலாக தற்போது கிராமப்புறங்களில் ஆங்காங்கே காணமுடிகிறது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai