Enable Javscript for better performance
என்.எஸ்.எஸ். மாவட்ட ஒருங்கிணைப்பாளருக்குப் பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டத்தில், நாட்டு நலப்பணித் திட்டப் பணியை முழுமையாக செயல்படுத்தியதற்காக அதன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மன்னார்குடி என்.ராஜப்பாவுக்கு பள்ளிக் கல்வித் துறை சார்பில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
    2017-18 ஆம் கல்வி ஆண்டில், திருவாரூர் மாவட்டத்தில், நாட்டு நலப் பணித் திட்டப் பணிகள் மற்றும் சிறப்பு முகாம்களை நூறு சதவீதம் சிறப்பாக நடத்தியதற்காக, அந்த அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், மன்னார்குடி தேசிய மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியருமான என். ராஜப்பாவுக்கு, சென்னையில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் அண்மையில் நடைபெற்ற விழாவில், தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ரெ.இளங்கோவன் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
    நிகழ்ச்சியில் திட்ட இணை இயக்குநர் க. செல்வகுமார், மாநிலத் தொடர்பு அலுவலர் ராஜசேகர், மண்டல மையத்தின் இயக்குநர் சாம்.செல்லையா ஆகியோர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai