Enable Javscript for better performance
கடலோரப் பகுதி வேளாண்மையில் பூச்சி, நோய் மேலாண்மைப் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    கடலோரப் பகுதி வேளாண்மையில் பூச்சி, நோய் மேலாண்மைப் பயிற்சி

    By DIN  |   Published on : 09th February 2018 02:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேதாரண்யம் அருகேயுள்ள வண்டுவாஞ்சேரி ஊராட்சியில் கடலோரப் பகுதி வேளாண்மையில் பூச்சி மேலாண்மை தொடர்பாக விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
    ஆரோகல் நிறுவன உதவியுடன் ம. சா. சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் கடலோரப் பகுதி வேளாண்மையில் புவியியல் அடிப்படையில் பூச்சி மேலாண்மைக்கான மாதிரித் திட்டத்தின் கீழ், நெல் மற்றும் தென்னை சாகுபடியில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்துப் பயிற்சி அளிக்கப்பட்டது.
    வண்டுறைமாரியம்மன் கோயில் வளாகத்தில் விவசாய சங்கத் தலைவர் வி. சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சி முகாமில், நெல் மற்றும் தென்னையில் நோய்த் தாக்கம், கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து காரைக்கால் வேளாண் கல்லூரி பேராசிரியர்கள் ரெத்தினசபாபதி, காண்டிபன் ஆகியோர் பயிற்சியளித்தனர்.
    மேலும், நெல் பயிரில் கதிர்நாவாய் உள்ளிட்ட பூச்சி மற்றும் பாக்டீரியா இலைக்கருகல் உள்ளிட்ட நோய்களை இனம் கண்டறிவது, இவற்றை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது. இதேபோல், தென்னையில் காண்டாமிருக வண்டு தாக்குதல், வாடல் நோய்த் தாக்கம் போன்ற நோய்களை இனம் கண்டறிந்து அவற்றை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும் விளக்கப்பட்டது.
    முகாமில், வேதாரண்யம் ம.சா. சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன களப் பொறுப்பாளர் ராஜவேலன் , ஆராய்ச்சியாளர் ராஜூ மற்றும் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai