Enable Javscript for better performance
கீழக்குறிச்சியில் இலவச கண் சிகிச்சை முகாம்- Dinamani

சுடச்சுட

    

    திருமக்கோட்டை லயன்ஸ் சங்கம், மாவட்ட கண் பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து, இலவச கண் சிகிச்சை முகாமை கீழக்குறிச்சியில் புதன்கிழமை நடத்தியது.
    முகாமுக்கு லயன்ஸ் சங்கத் தலைவர் டி.வி. ராமசாமி தலைமை வகித்தார்.
    சிறப்பு அழைப்பாளராக சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.பி.கே. ராஜேந்திரன் கலந்துகொண்டு, முகாமைத் தொடங்கி வைத்தார்.
    மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் பூபேஷ், மௌரி ஆகியோர் தலைமையில் மருத்துவக் குழுவினர், பயனாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். இதில், மொத்தம் 384 பேர் சிகிச்சைப் பெற்றனர். இவர்களில், 91 பேர் கண் அறுவைச் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.
    நிகழ்ச்சியில் அமைப்பின் செயலர் மருத்துவர் வி. ரெத்தினவேலு, பொருளாளர் கே.எம்.எஸ். பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai