Enable Javscript for better performance
குரூப்- 4 தேர்வு: நாகை மாவட்டத்தில் 41,185 தேர்வர்கள் எழுதுகின்றனர்- Dinamani

சுடச்சுட

    

    குரூப்- 4 தேர்வு: நாகை மாவட்டத்தில் 41,185 தேர்வர்கள் எழுதுகின்றனர்

    By DIN  |   Published on : 09th February 2018 02:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரசுப் பணியாளர் தேர்வாணைய குரூப்- 4 தேர்வை நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 41,185 பேர் எழுதவுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய குரூப்- 4 தேர்வு நாகை மாவட்டத்தில் 139 தேர்வுக் கூடங்களில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 11) நடைபெறுகிறது. இத்தேர்வில் பங்கேற்க நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 41,185 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
    தேர்வுப் பணிகள் சிறப்பாக நடைபெறுவதை உறுதி செய்ய, துணை ஆட்சியர் நிலையிலான அலுவலர்களைக் கொண்டு 8 பறக்கும் படைகளும், 22 சுற்றுக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இவைத் தவிர, 139 ஆய்வு அலுவலர்களும், 139 முதன்மைக் கண்காணிப்பாளர்களும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுவர். தேர்வுப் பணிகளை விடியோ பதிவு செய்ய 139 விடியோகிராபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    மாற்றுத் திறனாளி தேர்வர்களுக்காக, அனைத்து தேர்வுக் கூடங்களிலும் தரை தளத்தில் தேர்வு எழுதும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.தேர்வுக் கூடங்களில் ஆயுதம் ஏந்திய காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். போக்குவரத்துக் கழகம் சார்பில் தேர்வுக் கூடங்களுக்குப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    தேர்வில் யாரேனும் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டால், தொடர்புடையோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai