Enable Javscript for better performance
கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு- Dinamani

சுடச்சுட

    

    வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
    தமிழகத்தில் உள்ள அனைத்துப் பறவைகள் சரணாலயத்திலும் பறவைகள் கணக்கெடுக்கும் பணி ஒரேநேரத்தில் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
    பறவைகளின் சொர்க்கம் என்று அழைக்கப்படும் கோடியக்கரை சரணாலயத்துக்கு ஆண்டுதோறும் கார்காலப் பருவத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து பூநாரைகள் உள்ளிட்ட 250-க்கும் அதிகமான இனப் பறவைகள் லட்சக்கணக்கில் வலசை வருவது வழக்கம். இங்கு பருவக் காலத்துக்கான பறவைகள் எண்ணிக்கை ஜனவரி 2-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டது.
    இந்நிலையில், மாநிலம் முழுவதுக்குமான கணக்கெடுப்பு பணி நடைபெற்றதையொட்டி, அதன் ஒரு பகுதியாக கோடியக்கரை சரணாலயத்திலும் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றன.
    நாகை மாவட்ட வன உயிரினக் காப்பாளர் சதீஷ்கிடிசாலா மேற்பார்வையில் கணக்கெடுப்புப் பணி நடைபெற்றது. இதில் திருச்சி பிஷப் கல்லூரி, மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரி, நாகை ஐசக் நியூட்டன் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் மும்பை இயற்கை வரலாற்றுக் கழகத்தினர், வனச்சரகர் அயூப்கான் தலைமையிலான வனத்துறையினர் என 69 பேர்
    பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai