Enable Javscript for better performance
கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    மயிலாடுதுறை நகரம் 2-நெம்பர் புதுத்தெருவில் உள்ள அருள்மிகு மகா காளியம்மன் கோயில் உண்டியலின் பூட்டுகள் உடைக்கப்பட்டுஅதிலிருந்த பணம் திருடப்பட்டிருந்தது, வியாழக்கிழமை தெரியவந்தது.
    2-நெம்பர் புதுத்தெருவில் உள்ள அருள்மிகு மகா காளியம்மன் கோயில் அப்பகுதி வாழ் மக்கள் வழிபாட்டில் இருந்து வருகின்றது. இக்கோயிலின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த சுமார் 2 அடி உயரம், 1 அடி அகலம் கொண்ட இரும்பால் செய்யப்பட்ட உண்டியல் உடைக்கப்பட்டிருப்பது, வியாழக்கிழமை தெரியவந்தது.
    இது குறித்து, அக்கோயிலின் தர்மகர்த்தா ரா. ராஜ்குமார் என்பவர் கூறியது.ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் இந்த உண்டியல் பொதுமக்கள் பார்வையில் திறக்கப்படும். கடந்த ஆண்டில் உண்டில் திறக்கப்பட்டபோது உண்டியலில் ரூ.45 ஆயிரம் பணம் இருந்தது. தற்போது உண்டியில் நிரம்பியிருந்த நிலையில் உடைக்கப்பட்டு திருடப்பட்டிருப்பதால், ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் இருந்திருக்கலாம் எனவும், இந்த திருட்டுச் சம்பவம் குறித்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai