Enable Javscript for better performance
சுவாமி தயானந்தா கல்லூரியில் ரத்ததான முகாம்- Dinamani

சுடச்சுட

    

    குடவாசல் அருகே, மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், மஞ்சக்குடி சிட்டி யூனியன் வங்கி சார்பில் ரத்த தான முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
    மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற முகாமை கல்லூரியின் தாளாளர் எம்.ஜி. சீனிவாசன் தொடங்கி வைத்துப் பேசியது:
    தானங்களில் சிறந்தது ரத்ததானம். ரத்த தானம் செய்வதால் உடல்நலம் பாதிக்கும் என்ற தவறான கருத்து உள்ளது. ரத்த தானம் செய்வதால் மாரடைப்பு ஏற்படுவது குறைகிறது. புதிய ரத்த அணுக்கள் உருவாகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக பிறர் உயிர் காக்கப்படுகின்றன.
    ரத்த தானம் செய்யும் மனித நேயமிக்க பண்பினை ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆரோக்கியமான உணவுகளை அறிந்து அதை உண்ண வேண்டும். இக்காலத்தில் விஷத்தன்மையுள்ள உணவுகள் பெருகியுள்ளன. எனவே, விழிப்புணர்வுடன் வாழ வேண்டும் என்றார்.
    நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ரத்ததானம் செய்தனர். இதில் மஞ்சக்குடி சிட்டி யூனியன் வங்கி கிளை மேலாளர் எஸ். வீரமணி, குடந்தை ரோட்டரி சங்கத் தலைமை இயக்குநர் அப்துல்கபுர் மற்றும் உறுப்பினர்கள், கல்லூரி பேராசிரியர்கள், நாட்டுநலப்பணித் திட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். நாட்டுநலப்பணித் திட்ட அலுவலர் சிவக்குமார் வரவேற்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai