Enable Javscript for better performance
நாகையில் மகளிர் குழு உற்பத்தி பொருள்களின் விற்பனைக் கண்காட்சி: இன்று தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    நாகையில் மகளிர் குழு உற்பத்தி பொருள்களின் விற்பனைக் கண்காட்சி: இன்று தொடக்கம்

    By DIN  |   Published on : 09th February 2018 02:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருள்கள் விற்பனைக் கண்காட்சி நாகை அண்ணாசிலை அருகே உள்ள பூமாலை வணிக வளாகத்தில் வெள்ளிக்கிழமை (பிப்.9)தொடங்கப்படுகிறது.
    இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு வித்திடும் வகையில், மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருள்கள் கண்காட்சி மற்றும் விற்பனை நாகை பூமாலை வணிக வளாகத்தில் பிப். 9-ஆம் தேதி முதல் பிப். 18-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
    பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள், கைவினைப் பொருள்கள், பொம்மைகள், ஆயத்த ஆடைகள், பேன்ஸி பொருள்கள், கைப்பைகள், மர பொம்மைகள், ஒயர் கூடைகள், பாசிமணி மாலைகள், தின்பண்டங்கள், சிறுதானிய வகைகள், ஊறுகாய்கள், அழகு சாதனப் பொருள்கள் உள்பட பல்வேறு பொருள்கள் இந்தக் கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்படவுள்ளன.
    பொதுமக்கள் இக்கண்காட்சியைப் பார்வையிட்டுத் தங்களுக்குத் தேவையானப் பொருள்களை வாங்கி, மகளிர் குழுக்களின் மேம்பாட்டை ஊக்குவிக்க முனைப்புக் காட்டுமாறு ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai