Enable Javscript for better performance
நாகை, திருவாரூர் மாவட்டங்களில்வருவாய்த் துறை ஊழியர்கள் 597 பேர் தற்செயல் விடுப்பு- Dinamani

சுடச்சுட

    

    நாகை, திருவாரூர் மாவட்டங்களில்வருவாய்த் துறை ஊழியர்கள் 597 பேர் தற்செயல் விடுப்பு

    By DIN  |   Published on : 09th February 2018 02:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை, திருவாரூர் மாவட்டங்களில், வருவாய்த் துறை ஊழியர்கள் 597 பேர் வியாழக்கிழமை தற்செயல் விடுப்புப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
    வருவாய்த் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். வருவாய்த் துறை ஊழியர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறை ஊழியர்கள் 2-ஆம் நாளாக வியாழக்கிழமை தற்செயல் விடுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    மாவட்ட அளவில் 229 வருவாய்த் துறை ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்துப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
    இதனால், 8 வட்டாட்சியர் அலுவலகங்கள் உள்பட வருவாய்த் துறை அலுவலகங்களில் வழக்கமானப் பணிகள் சுணக்கமடைந்திருந்தன.
    இதேபோல், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 8 வட்டாட்சியர் அலுவலகங்களில் திருவாரூர்-124, மன்னார்குடி-78, திருத்துறைப்பூண்டி-35, கூத்தாநல்லூர்-27, வலங்கைமான்-28, குடவாசல்-24, நன்னிலம்-34 மற்றும் நீடாமங்கலத்தில்-32 என மொத்தம் 382 வருவாய்த்துறை அலுவலர்கள் பணியாற்றுகின்றனர்.
    இவர்களில் வியாழக்கிழமை 14 ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வந்தனர்.
    368 பேர் வரவில்லை. இதனால், வருவாய்த்துறை தொடர்புடையப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
    இதற்கிடையில், டிஎன்பிஎஸ்சி தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருப்பதால் அதற்கான ஆயத்தப் பணிகளுக்காக, 8 வட்டாட்சியர் உள்ளிட்ட 14 பேர் பணியாற்றுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai