Enable Javscript for better performance
நீடூர் பள்ளியில் புத்தகக் கண்காட்சி- Dinamani

சுடச்சுட

    

    மயிலாடுதுறை வட்டம், நீடூர் கிராமத்தில் உள்ள அல்ஹாஜி மெட்ரிக் பள்ளியில் புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.
    பள்ளி நிர்வாகம் மற்றும் அநுராகம் பதிப்பகம் இணைந்து நடத்தும் இக்கண்காட்சி பிப் 7-ஆம் தேதி தொடங்கி 9-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
    கண்காட்சி தொடக்க விழாவுக்கு பள்ளித் தாளாளர் ஏ. ஹஸன்முஹம்மது தலைமை வகித்தார். பள்ளியின் முதல்வர் பி. ராஜசுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தார்.
    அநுராகம் பதிப்பகத்தின் விற்பனையாளர்அசோக் ஆர்த்தி இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.
    இக்கண்காட்சியில் குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்குத் தேவையான ஆயிரத்திற்கு மேற்பட்ட புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai