Enable Javscript for better performance
பிப். 10-இல் குடிமைப் பொருள் வழங்கல் குறைதீர் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    நாகை மாவட்டத்தில் குடிமைப் பொருள் வழங்கல் குறைதீர் கூட்டம் பிப். 10-ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு : குடிமைப் பொருள் வழங்கல் குறைதீர் கூட்டம், வட்டத்துக்கு ஒரு கிராமம் வீதம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் பிப். 10-ஆம் தேதி நடைபெறுகிறது. தொடர்புடைய ஊராட்சி அலுவலகத்தில் காலை 10 முதல் பகல் 1 மணி வரை இக்கூட்டம் நடைபெறும். நியாயவிலைக் கடைகள் தொடர்பான புகார்கள், குடும்ப அட்டையில் பெயர் நீக்குதல், சேர்த்தல், முகவரி மாற்றம் மற்றும் கடை மாற்றம் கோருதல், புதிய குடும்ப அட்டை கோருதல் உள்ளிட்டவைகளுக்கு இக்கூட்டத்தில் மனு அளித்துத் தீர்வுப் பெறலாம்.
    வட்டம் - ஊராட்சி என்ற அடிப்படையில், கூட்டம் நடைபெறும் ஊராட்சிகளின் விவரம் : நாகப்பட்டினம் - அம்பல், கீழ்வேளூர் - இருக்கை, திருக்குவளை - ஆதமங்கலம், வேதாரண்யம் - பெரியகுத்தகை, மயிலாடுதுறை - மறையூர், தரங்கம்பாடி - ஆக்கூர், சீர்காழி - அளக்குடி, குத்தாலம் -
    தேரழுந்தூர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai