Enable Javscript for better performance
புதிய தொழில் முனைவோர் மானியக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    புதிய தொழில் முனைவோர் மானியக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்

    By DIN  |   Published on : 09th February 2018 02:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள், நீட்ஸ் திட்டத்தில் மானியத்துடன் கூடிய தொழில் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு : பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு மற்றும் ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களை தொழில் முனைவோர்களாக்கும் வகையில் செயல்படுத்தப்படும் நீட்ஸ் திட்டத்தில், ஐஸ் கட்டிகள் தயாரிப்பு, மீன் பதப்படுத்துதல், டைல்ஸ் விற்பனை, பாக்கு மட்டை தட்டு உற்பத்தி, ஆயத்த ஆடைகள் தயாரிப்பு உள்பட பல்வேறு தொழில்கள் சார்ந்த நிறுவனங்கள் தொடங்க மானியக்கடன் பெறலாம்.
    மூலதன செலவினங்களில் 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 25 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். சிறப்புப் பிரிவினருக்கான வயது வரம்பு- 21 முதல் 45 வரை. பொது பிரிவினருக்கான அதிகபட்ச வயது வரம்பு 35. தகுதியான ஆண்கள், பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் இத்திட்டத்தில் கடன் பெறலாம். இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு மாவட்டத் தொழில் மைய பொது மேலாளர் அலுவலகத்தை நேரில் அணுகலாம் அல்லது 4365-251170 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai