Enable Javscript for better performance
புதிய ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    புதிய ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 09th February 2018 02:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதிய ரயில் பாதை திட்டங்களை செயல்படுத்த ரயில்வே அமைச்சகம் முனைப்பு காட்ட வேண்டும் என தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் துணைப் பொதுச் செயலர் மனோகரன் தெரிவித்தார்.
    நீடாமங்கலத்தில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ரூ. 3.26 கோடியில் 14 புதிய ரயில்வே பாதை திட்டங்களுக்கு தெற்கு ரயில்வேயில் சர்வேக்கள் நடைபெற்று வருகிறது. கடந்த 2017-ஆம் ஆண்டு மார்ச் முடிய திட்டத் தொகையில் ரூ. 1.30 கோடி செலவிடப்பட்டிருக்கிறது.
    2018 பிப்ரவரி 1-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் ரூ. 45 லட்சம் தெற்கு ரயில்வே சர்வேக்களை முடிக்க நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. மேலும் 2018-19-ஆம் நிதியாண்டில் 101 கிலோ மீட்டர் ஜோலார்பேட்டை- திருப்பத்தூர்-ஓசூர் வழி கிருஷ்ணகிரி தமிழக புதிய ரயில் பாதை திட்டத்துக்கான சர்வே அறிவிப்பும் நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றிருக்கிறது. பெரும்பாலான சர்வேக்கள் செயல் வடிவம் பெறுவது இல்லை. இதுவரை எடுக்கப்பட்ட நிறைவேற்றும் சாத்தியக்கூறு உள்ள புதிய பாதை திட்டங்களை செயல்படுத்த ரயில்வே அமைச்சகம் முனைப்பு காட்ட வேண்டும் என்றார் அவர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai