Enable Javscript for better performance
பைக்கிலிருந்து தவறி விழுந்தவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    மன்னார்குடி அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தார்.
    முக்குளம்சாத்தனூர் தெற்குதெருவைச் சேர்ந்த செங்குட்டுவனின் மகன் தினகரன்(35). இவர், தனியார் கட்டுமான நிறுவனத்தில் மின் பணியாளராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், புதன்கிழமை இரவு மன்னார்குடியில் வேலையை முடித்துக்கொண்டு, இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குத் திரும்பியபோது, மேலத்திருப்பாலக்குடி, பிள்ளையார்கோவில் குளம் அருகே நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த தினகரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, பரவாக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai