Enable Javscript for better performance
லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டம் சேகரையில், பட்டா மாறுதலுக்காக லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
    சேகரை கிராம நிர்வாக அலுவலர் கே. பூமிநாதன் (31). இவரிடம், திருவாரூரைச் சேர்ந்தவர் சேகரைக் கிராமத்தில் உள்ள தனது இடத்துக்கு பட்டா மாறுதல் கேட்டு, விண்ணப்பித்திருந்தார். பட்டா மாறுதல் செய்ய கிராம நிர்வாக அலுவலர் கே. பூமிநாதன் ரூ. 2,500 லஞ்சம் கேட்டாராம். லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த நபர் இதுகுறித்து நாகப்பட்டினம் , ஊழல் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
    இதைத்தொடர்ந்து, ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாரின் ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய பணத்தை, கிராம நிர்வாக அலுவலர் கே. பூமிநாதனிடம் கொடுக்கும் போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளர் காந்திமதிநாதன், ஆய்வாளர் ரெத்தினவள்ளி உள்ளிட்டோர், கே. பூமிநாதனை, கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai