Enable Javscript for better performance
108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நாகை அவுரித் திடலில் ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
    108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் 2017-ஆம் ஆண்டு ஊதிய உயர்வுக்காக அரசு வழங்கிய தொகையைத் தொழிலாளர்களுக்கு முறையாக வழங்க வேண்டும். ஈட்டிய விடுப்புக்கான பணப் பயனை ஒப்பந்தப்படி வழங்க வேண்டும். 108 ஆம்புலன்ஸ் சேவைத் திட்டத் தொழிலாளர்களின் ஊதியம், பராமரிப்பு உள்ளிட்டவைகளில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து நீதி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    சங்கத்தின் நாகை மாவட்டத் தலைவர் விக்டர் தலைமை வகித்தார். செயலாளர் சரவணக்குமார், பொறுப்பாளர் ராஜ்குமார் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai