Enable Javscript for better performance
108 ஆம்புலன்ஸ் மின் கம்பத்தில் மோதி விபத்து- Dinamani

சுடச்சுட

    

    சீர்காழி அருகே மின்கம்பத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனம் மோதி வியாழக்கிழமை விபத்துக்குள்ளானது.
    சீர்காழி அருகேயுள்ள மாதனம் கிராமத்தில் தேள் கடித்த ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்துவர வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து 108 ஆம்புலன்ஸ் வாகனம் சென்றது. சீர்காழி சாலையில் சென்று கொண்டிருந்தபோது நயினார்தோப்பு பகுதியில் எதிரில், சாலை விதியை பின்பற்றாமல் வந்த லாரி மீது மோதலை தவிர்க்கும் வகையில் ஆம்புலன்ஸ் வாகனத்தை இயக்கியபோது, சாலையோர மின்கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.
    இதில், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கொள்ளிடம் பில்படுகையைச் சேர்ந்த அ. கண்ணன்(36), மருத்துவ உதவியாளர் கீழகொண்டத்தூர் ஜான்சிராணி(26) ஆகியோர் காயமடைந்தனர். பின்னர் இருவரும் மீட்கப்பட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து வைத்தீஸ்வரன்கோயில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai