Enable Javscript for better performance
400 மீட்டர் ஓட்டத்தில் தேசிய அளவில் சீர்காழி மாணவர் மூன்றாமிடம்: ஒலிம்பிக் பயிற்சி முகாமுக்கு தகுதி- Dinamani

சுடச்சுட

    

    400 மீட்டர் ஓட்டத்தில் தேசிய அளவில் சீர்காழி மாணவர் மூன்றாமிடம்: ஒலிம்பிக் பயிற்சி முகாமுக்கு தகுதி

    By DIN  |   Published on : 09th February 2018 02:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் தேசிய அளவில் 400 மீட்டர் ஓட்டத்தில் மூன்றாம் இடம் பெற்று சாதனை படைத்தார்.
    புதுதில்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான தடகள விளையாட்டுப் போட்டியில் சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவர் ஆர்.சி. கணேஷ் தமிழக அணிக்காக பங்கேற்று 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தேசிய அளவில் 3-ஆம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.
    வெற்றி பெற்ற மாணவரை இந்திய தடகள வீராங்கனை அஞ்சு ஜார்ஜ் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். மேலும், 200 மீட்டர் ஓட்டத்தில் 4-ஆம் இடம் பெற்று ஒலிம்பிக் பயிற்சி முகாமிற்கு தகுதி பெற்று தமிழகத்திற்கும், பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
    சாதனை படைத்த மாணவர் கணேஷுக்கு விவேகானந்தா பள்ளி குழுமங்களின் தலைவர் ராதாகிருஷ்ணன், குட்சமாரிட்டன் கல்வி குழுமங்களின் தலைவர் அனிதா ராதாகிருஷ்ணன், இயக்குநர்கள் பிரவீன்வசந்த்ஜெபஸ், அனுஷா, அலெக்ஸாண்டர், முதல்வர் ஜோஸ்வாபிரபாகரசிங், துணை முதல்வர் சரோஜா, மேலாளர் சுதாகர், நிர்வாக அலுவலர் சண்முகம் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர்.
    மாணவரை ஊக்குவித்த உடற்கல்வி இயக்குநர் ரமேஷ், உடற்கல்வி ஆசிரியர்கள் சிவக்குமார், சசிக்குமார், சத்தியமூர்த்தி, நெடுமாறன் ஆகியோருக்கு பள்ளி நிர்வாகம் பாராட்டுத் தெரிவித்தது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai