Enable Javscript for better performance
ஆச்சாள்புரத்தில் விவசாயிகளுக்கு ஏப்ரல் மாதத்துக்குள் இழப்பீடு: அதிகாரிகள் உறுதி- Dinamani

சுடச்சுட

    

    ஆச்சாள்புரத்தில் விவசாயிகளுக்கு ஏப்ரல் மாதத்துக்குள் இழப்பீடு: அதிகாரிகள் உறுதி

    By DIN  |   Published on : 24th March 2018 05:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சீர்காழி அருகே ஆச்சாள்புரத்தில் விடுபட்ட 340 விவசாயிகளுக்கு ஏப்ரல் மாதத்துக்குள் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்குவதாக அதிகாரிகள் உறுதியளித்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.
    ஆச்சாள்புரம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிக் கடந்த 2016-17-ஆம் ஆண்டில், 340 விவசாயிகளுக்குப் பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்காமல் விடுவித்திருந்தது. இதுகுறித்து விவசாயிகள் பலமுறை போராட்டம் நடத்தினர்.
    இந்நிலையில், விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் ஆனந்தகுமார், ரவிசுந்தரம், சேகர் மற்றும் கூட்டுறவு வங்கிச் செயலாளர் ஸ்டாலின் உள்ளிட்டோர் அண்மையில் சென்னையில் காப்பீடு நிறுவனத்துக்குச் சென்று, நாகை மாவட்டத்துக்கான காப்பீடு அலுவலர் கணேசனை சந்தித்துப் பேசினர்.
    அப்போது, விடுபட்ட விவசாயிகளுக்கான காப்பீடு இழப்பீட்டுத் தொகை ஏப்ரல் இறுதிக்குள் விநியோகிக்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளதாகவும், தவறும்பட்சத்தில் அடுத்த கட்டமாக தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்படும் என்றும் விவசாயச் சங்கப் பிரதிநிதி ரவிசுந்தரம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai