Enable Javscript for better performance
எண்ணெய் துரப்பணப் பணிக்கு எதிர்ப்பு: தளவாடப் பொருள்கள் ஏற்றி வந்த லாரி திருப்பி அனுப்பி வைப்பு- Dinamani

சுடச்சுட

    

    எண்ணெய் துரப்பணப் பணிக்கு எதிர்ப்பு: தளவாடப் பொருள்கள் ஏற்றி வந்த லாரி திருப்பி அனுப்பி வைப்பு

    By DIN  |   Published on : 24th March 2018 05:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சீர்காழி அருகேயுள்ள தொடுவாய் மீனவ கிராமத்துக்கு ஓஎன்ஜிசி நிறுவனத்திலிருந்து லாரியில் கொண்டுவரப்பட்ட தளவாடப் பொருள்களை இறக்கவிடாமல் கிராம மக்கள் லாரியை வியாழக்கிழமை இரவு திருப்பி அனுப்பினர்.
    சீர்காழி அருகேயுள்ள பழையபாளையத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில்ஆழ்துளை கிணறுகள் அமைத்து, எண்ணெய் துரப்பனப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு, அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
    இந்நிலையில், பழையபாளையத்திலிருந்து சிமென்ட் ஷீட், கம்பிகள் உள்ளிட்ட தளவாடப் பொருள்களை ஏற்றிக்கொண்டு, லாரி ஒன்று தொடுவாய் கிராமத்தில் உள்ள ஓஎன்ஜிசிக்கு சொந்தமான இடத்துக்கு வந்தது. அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் லாரியை நிறுத்தி, இப்பகுதியில் பொருள்களை இறக்கக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்தனர்.
    தகவலறிந்த சீர்காழி போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்று மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும், மீனவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால், பொருள்களை இறக்காமல் லாரி திரும்பிச்சென்றது.
    இப்பிரச்னை தொடர்பாக, தொடுவாய் கிராம மக்கள், சீர்காழி போலீஸார் பங்கேற்ற அமைதிப் பேச்சுவார்த்தை, சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் பாலமுருகன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்படவில்லை.
    இதுகுறித்து தொடுவாய் மீனவர் கூறியது:
    கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஓஎன்ஜிசி நிறுவனத்தினர் சோதனைப் பணிக்காக இடம் தேவைப்படுவதாக கூறி, தொடுவாயில் ஒரு மீனவருக்குச் சொந்தமான இடத்தை வாங்கினர். அப்போது, சோதனை குறித்த முழுவிவரமும் தெரியாத அந்த மீனவரும் அந்த இடத்தை ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு விற்றுவிட்டார்.
    அந்த இடத்தில் தற்போது எண்ணெய் துறப்பன பணியை மேற்கொள்ளும் வகையில் பணியைத் தொடங்கத்தான் லாரியில் தளவாடப் பொருள்களை எடுத்துவந்துள்ளனர். இதனால் தொடுவாய் கிராமத்துக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதால் மீனவர்கள் எதிர்த்துவருகிறோம் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai