Enable Javscript for better performance
கல்லூரி மாணவருக்கு கத்திக்குத்து- Dinamani

சுடச்சுட

    

    மன்னார்குடியில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற கோயில் திருவிழாவில் கல்லூரி மாணவர் கத்தியால் குத்தப்பட்டார்.
    மன்னார்குடி கீழராஜவீதியில் வசிக்கும் பாலசுப்பிரமணியன் மகன் பிரவீண்(20). இவர், இடையர்நத்தத்தில் உள்ள தனியார் தொழிற்கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார்.
    இந்நிலையில், வியாழக்கிழமை இரவு நடைபெற்ற ராஜகோபாலசுவாமி ஊர்வலத்தைப் பார்ப்பதற்காக, காந்திஜீ சாலையில் பிரவீண் நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர், பிரவீணை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டாராம். இதில், பலத்தகாயமடைந்த பிரவீண், மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இதுகுறித்து, மன்னார்குடி போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai