Enable Javscript for better performance
கல்வி உதவித்தொகை கோரி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை- Dinamani

சுடச்சுட

    

    கல்வி உதவித்தொகை கோரி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

    By DIN  |   Published on : 24th March 2018 05:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொறையாறில் கல்வி உதவித்தொகை வழங்கக் கோரி மாணவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    பொறையாறு டிபிஎம்எல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு 2017-2018 ஆம் கல்வியாண்டுக்கான கல்வி உதவித்தொகை வழங்காததைக் கண்டித்து வகுப்பு புறக்கணிப்பு செய்து 2000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரியிலிருந்து பேரணியாக வட்டாட்சியர் அலுவலகம் சென்று அங்கு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஆர்ப்பாட்டத்தில் இந்திய மாணவர் சங்க பொறுப்பாளர்கள் தயாணி அமுல், ராஜேஷ், அன்பு, விஷ்ணுராஜ், சுபாஷ், கிருபா உள்ளிட்டோர் கல்வி உதவித்தொகை வழங்கக் கோரி கண்டன உரையாற்றினர். இதையறிந்த வருவாய்த் துறை அலுவலர்கள் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மார்ச் மாதம் இறுதிக்குள் கல்வி
    உதவித்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்ததையடுத்து மாணவர்கள் போராட்டத்தை விலக்கிக்கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai