Enable Javscript for better performance
காவிரி மேலாண்மை வாரியம் : ஏப். 5 முதல் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் சங்கம் முடிவு- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியம் : ஏப். 5 முதல் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் சங்கம் முடிவு

    By DIN  |   Published on : 24th March 2018 05:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உச்சநீதிமன்றம் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில், மத்திய அரசைக் கண்டித்து ஏப்ரல் 5-ஆம் தேதி முதல் தண்டவாளத்தை முற்றுகையிட்டு ரயில் மறியல் போராட்டம் நடத்துவது என தமிழ்நாடு விவசாய சங்கக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
    விவசாயச் சங்கங்கள் மற்றும் 13 அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளின் கலந்தாய்வுக் கூட்டம், மயிலாடுறையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நாகை மாவட்டத் தலைவர் எஸ். துரைராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயற்குழு உறுப்பினரும், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினருமான நாகை மாலி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன், காவிரி பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் காவிரி. தனபாலன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் ரெ. இடும்பையன், தமிழர் உரிமை இயக்கம் அமைப்பாளர் சுப்பு. மகேசு, நிலம்- நீர்ப் பாதுகாப்புக் கூட்டமைப்பைச் சேர்ந்த இரணியன், உழவன் பாண்டுரெங்கன் உள்ளிட்டோர் பேசினர்.
    உச்சநீதிமன்ற உத்தரவின்படி, மார்ச் 29-ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காவிட்டால், காவிரி டெல்டா மாவட்டங்களில் ஏப்ரல் 5-ஆம் தேதி முதல் தண்டவாளங்களை முற்றுகையிட்டு, ரயில் நிறுத்தப் போராட்டங்கள் நடத்துவது, டெல்டா மாவட்டங்களில் நடைமுறைபடுத்தப்படவுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டங்களை மத்திய அரசு கைவிடவேண்டும், டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai