Enable Javscript for better performance
சீர்காழியில் 1,489 மதுபான புட்டிகள் பறிமுதல்: ஒருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    சீர்காழியில் 1,489 மதுபான புட்டிகள் பறிமுதல்: ஒருவர் கைது

    By DIN  |   Published on : 24th March 2018 05:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சீர்காழியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த புதுச்சேரி மதுபான புட்டிகளை மதுவிலக்கு போலீஸார் வியாழக்கிழமை பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.
    சீர்காழி விளந்திட சமுத்திரம் காளியம்மன் கோயில் தெருவில் வசிக்கும் பாண்டியன் என்பவரது வீட்டில் புதுச்சேரி மதுபான புட்டிகள், சட்ட விரோதமாகக் கடத்தி வரப்பட்டுப் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மதுவிலக்குப் பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, மதுவிலக்குப் பிரிவு ஆய்வாளர் பிரேம் ஆனந்த் மற்றும் போலீஸார் அவரது வீட்டுக்குச் சென்று சோதனை செய்தனர். அப்போது, 31 அட்டைப் பெட்டிகளில், 1,489 புதுச்சேரி மதுபான புட்டிகள் இருந்தது தெரியவந்தது.
    மதுபான புட்டிகளையும், அங்கிருந்த இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்த போலீஸார், மதுவிற்பனையில் ஈடுபட்ட தாடாளன் வடக்கு மடவிளாகத்தைச் சேர்ந்த ராம்குமாரை கைது செய்தனர். தப்பியோடிய பாண்டியனை தேடி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai