Enable Javscript for better performance
தமிழிசை மூவர் விழா: 2-ஆம் நாள் இசை நிகழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    சீர்காழியில் தமிழிசை மூவர் விழாவின் 2-ஆம் நாளான வெள்ளிக்கிழமை 4 மாவட்டங்களைச் சேர்ந்த அரசு இசைப்பள்ளி மாணவர்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
    சீர்காழியில் பிறந்து, உலகெங்கும் தமிழிசையை வளர்த்த முத்துதாண்டவர், அருணாச்சலக்கவிராயர், மாரிமுத்தாப்பிள்ளை ஆகியோரின் நினைவைப் போற்றும் வகையில் தமிழிசை மூவர் விழா சீர்காழி தமிழிசை மூவர் மண்டபத்தில் வியாழக்கிழமை தொடங்கியது.
    மூன்று நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் 2-ஆம் நாளான வெள்ளிக்கிழமை முற்பகலில் டி.பி.என். இராமநாதன், பி.ஜி. யுவராஜ் குழுவினரின் மங்கல இசை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சீர்காழி, கடலூர், விழுப்புரம், திருவாரூர் மாவட்ட அரசு இசைப்பள்ளி மாணவர்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
    பின்னர், 4 மாவட்ட அரசு இசைப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களின் பாட்டு, திருவெள்ளியக்குடி டி.ஆர்.எஸ். மணிமாறன் நாகசுரம், திருப்புங்கூர் எஸ். மணிகண்டன் நாகசுரம், பி. வெங்கடேசன் தவில் நிகழ்ச்சியும், எஸ். சௌம்யா தமிழிசை, எம். பார்கண்ணன் ஆகியோர் வயலின், சுப்பிரமணியன் மிருதங்க இசையும் நடைபெற்றது. தொடர்ந்து, வித்யாசுந்தரேசன் குழுவினரின் பரத நாட்டியம் நடைபெற்றது.
    இதில் கலைப் பண்பாட்டுத் துறை இணை இயக்குநர் குணசேகரன், சீர்காழி அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஹேமா மற்றும் இசைப் பள்ளி மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai