Enable Javscript for better performance
நாகை மாவட்ட சமரச தீர்வு மைய 13-ஆம் ஆண்டு நிறைவு விழா: ஏப். 9-ஆம் தேதி நடைபெறுகிறது- Dinamani

சுடச்சுட

    

    நாகை மாவட்ட சமரச தீர்வு மைய 13-ஆம் ஆண்டு நிறைவு விழா: ஏப். 9-ஆம் தேதி நடைபெறுகிறது

    By DIN  |   Published on : 24th March 2018 05:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ்நாடு சமரச தீர்வு மையத்தின் 13-ஆம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, நாகை மாவட்ட சமரச தீர்வு மையம் சார்பில் நாகையில் ஏப். 9-ஆம் தேதி விழா நடைபெறுகிறது.
    மாவட்ட சமரச தீர்வு மையம் மூலம், முறையான பயிற்சி அளிக்கப்பட்ட மூத்த வழக்குரைஞர்களைக் கொண்டு, நிலுவையில் உள்ள வழக்குகளில் இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி பிரச்னைக்கு சமுகத் தீர்வு காணப்படுகிறது.
    சகோதர, சகோதரிகளுக்கு இடையேயான சொத்துப் பிரச்னை வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள், விவாகரத்து வழக்குகள், குடும்ப பிரச்னைகள் சார்ந்த வழக்குகள், பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னை மற்றும் இதர உரிமையியல் வழக்குகளின் வழக்காடிகள், தங்கள் பிரச்னைகளை மாவட்ட சமரச தீர்வு மைய நடுவர் முன்னிலையில், ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசி தீர்வு காண முடியும்.
    தமிழ்நாடு சமரச தீர்வு மையத்தின் 13-ஆம் ஆண்டு விழாவையொட்டி, மாவட்ட சமரச தீர்வு மையம் சார்பில் நாகையில் ஏப். 9-ஆம் தேதி 13-ஆம் ஆண்டு நிறைவு விழா நடைபெறுகிறது.
    இவ்விழாவில், மாவட்ட நீதிபதி ஆர். பத்மநாபன், நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி ஜி. ராஜா, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு தலைவர் மற்றும் தலைமை நீதித் துறை நடுவர் (கூடுதல் பொறுப்பு) கெ.ரவி, நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் ஷேகர் சஞ்சய் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள், வழக்குரைஞர்கள் பங்கேற்கின்றனர்.
    இவ்விழாவில் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்குமாறு மாவட்ட ஆட்சியரக செய்திக் குறிப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai