Enable Javscript for better performance
பகத்சிங் நினைவு நாள்: ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    பகத்சிங் நினைவு நாள்: ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பேரணி

    By DIN  |   Published on : 24th March 2018 05:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் நினைவு நாளையொட்டி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நாகையில் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் நினைவு நாளையொட்டியும், நாகை மாவட்டத்தில் புதிய தொழிற்சாலைகளைத் தொடங்கி, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கக் கோரியும் இந்தப் பேரணி நடைபெற்றது.
    ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் வி.வி. ராஜா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஏ. ரவிச்சந்திரன் தொடக்கவுரையாற்றினார். சங்கத்தின் மாநிலத் தலைவர் எம். செந்தில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, பேரணியைக் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஏ.வி. சிங்காரவேலன், மாநிலக் குழு உறுப்பினர் மேகலா, மாவட்டப் பொருளாளர் ஏ. சிவக்குமார் மற்றும் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
    நாகை மேலக்கோட்டை வாசல் பகுதியிலிருந்து தொடங்கிய பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியே சென்று புதிய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. பின்னர், பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai