Enable Javscript for better performance
பால்குட ஊர்வலத்தின்போது போக்குவரத்து மாற்றம் செய்ய கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    பால்குட ஊர்வலத்தின்போது போக்குவரத்து மாற்றம் செய்ய கோரிக்கை

    By DIN  |   Published on : 24th March 2018 05:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கொள்ளிடம் புலீஸ்வரி அம்மன் கோயில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, நடைபெறும் பால்குட ஊர்வலத்தின்போது சிதம்பரம் - சீர்காழி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்காத வகையில் மாற்றுப் பாதையில் செல்ல மாவட்ட காவல் துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சீர்காழி அருகேயுள்ள கொள்ளிடம் புலீஸ்வரி அம்மன் கோயிலில் மார்ச் 30-ஆம் தேதி நடைபெறவுள்ள பங்குனி உத்திர திருவிழாவின்போது, கொள்ளிடம் ஆற்றிலிருந்து மாலை 4 மணியளவில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடி எடுத்துக்கொண்டு ஊர்வலமாக கொள்ளிடம் சோதனைச் சாவடியிலிருந்து சிதம்பரம் - சீர்காழி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கோயிலை சென்றடைவர். பால்குட ஊர்வலத்தின்போது, பக்தர்களின்கூட்டம் சுமார் 1 கிலோமீட்டர் தூரத்துக்கு கூடிவிடுவதால், எந்தவொரு வாகனமும் செல்லமுடியாத நிலை ஏற்படும். அப்போது, அனைத்து வாகனங்களும் வரிசையாக நிறுத்தப்பட்டு சுமார் 4 மணி நேரத்துக்குப் பிறகு இரவு 7 மணியளவில் வாகனப் போக்குவரத்து தொடங்கும்.
    ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழாவின்போது வழக்கமாக சிதம்பரம் - சீர்காழி தேசிய நெடுஞ்சாலையில் மதியம் 3 முதல் இரவு 7 மணிவரை போக்குவரத்து நிறுத்தப்படும். விழாவையொட்டி, நீண்ட நேரம் வாகனப் போக்குவரத்து தடைபடுவதால் பேருந்து பயணிகள், பக்தர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்படுவார்கள். எனவே, போக்குவரத்து பாதிக்காத வகையில் பால்குட ஊர்வலத்தின்போது மாலை 3 முதல் இரவு 7 மணி வரை மாற்றுப்பாதையில் போக்குவரத்து நடைபெற மாவட்ட காவல் துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை
    விடுத்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai