Enable Javscript for better performance
புதிய மின்மாற்றி இயக்கி வைப்பு- Dinamani

சுடச்சுட

    

    மன்னார்குடி அருகேயுள்ள அசேசம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி இயக்கி வைக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    அசேசம் ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் சீரான மின்விநியோகம் செய்வதில் தடை இருப்பதாகவும், இதனால் மின்சாதனப் பொருள்கள், மின்மோட்டார்கள் இயக்குவதில் சிரமம் இருப்பதாகவும், இப்பிரச்னைகளுக்குத் தீர்வுகாணும் வகையில் கூடுதலாக மின்மாற்றி அமைத்து தரவேண்டுமென அப்பகுதி மக்கள் மன்னார்குடி மின்வாரியத்தில் கோரிக்கை மனு அளித்திருந்தனர்.
    கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், மத்திய அரசின் தீனதயாள் உபாத்தியாய கிராம ஜோதி யோஜனா திட்டத்தின் கீழ் ரூ. 7.50 லட்சத்தில் அசேசம் ஊராட்சி தென்றல் வீதியில் 17 மின் கம்பங்கள், ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு மின் கம்பிகள், மின்மாற்றி ஆகியவைஅமைக்கும் பணி நடைபெற்றது. இப்பணிகள் முடிவடைந்ததை அடுத்து, மின் மாற்றி தொடங்கிவைக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மன்னார்குடி செயற்பொறியாளர் கி. ராதிகா பங்கேற்று புதிய மின்மாற்றியை இயக்கி வைத்தார். இதில், உதவி செயற்பொறியாளர் ஆ. மதியழகன், இளமின் பொறியாளர் க. கண்ணன், தொழிலதிபர் ஜி. மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai