Enable Javscript for better performance
மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் பங்குனித் தேரோட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் பங்குனித் தேரோட்டம்

    By DIN  |   Published on : 24th March 2018 01:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    manargudi

    மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் பங்குனித் திருவிழாவையொட்டி நடைபெற்ற திருத்தேரோட்டம். (உள்படம்) திருத்தேரில், ருக்மணி, சத்யபாமா சமேதராக அருள் பாலிக்கும் ராஜகோபால சுவாமி.

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் பங்குனித் திருவிழாவையொட்டி, திருத்தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    இக்கோயிலில் பங்குனித் திருவிழா மார்ச் 7-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஒவ்வோர் நாளும் உத்ஸவர் ராஜகோபாலசுவாமி கண்ணன், மரவுரிராமர், பட்டாபிராமர், வேணுகோபாலர், ராமர் மற்றும் ராஜ அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்வுகளாக, கண்டபேரண்ட பக்ஷி, சூரியபிரபை, கோ ரதம், வெண்ணெய்த்தாழி, தங்க வெட்டுங்குதிரை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
    17-ஆம் நாள் திருத்தேரோட்ட விழாவையொட்டி, வெள்ளிக்கிழமை ரதா ரோஹணத்தில் கல்யாணத் திருக்கோலத்தில் ருக்மணி, சத்யபாமா சமேதராக ராஜகோபாலசுவாமி அருள்பாலித்தார். இதைத் தொடர்ந்து, 51 அடி உயரம், 36 அடி சுற்றளவில் 55 டன் எடைகொண்ட தேரில், 50 அடிக்கு இரண்டு கயிறு வடமும், இரண்டு சங்கிலி வடமும் இணைக்கப்பட்டு, மலர்களாலும், வண்ணத் துணிகளாலும் அலங்கரிக்கப்பட்ட தேரில், ராஜகோபாலசுவாமி, ருக்மணி, சத்யபாமா சமேதராக எழுந்தருளி, கோபாலசமுத்திரம் கீழவீதி, தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி என கோயிலின் நான்கு வெளிப் பிராகாரங்களில் உத்ஸவராக ஒருமுறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai