Enable Javscript for better performance
முச்சந்தி காளியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா- Dinamani

சுடச்சுட

    

    நாகை வெளிப்பாளையத்தில் உள்ள அருள்மிகு முச்சந்தி காளியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா நிகழ்ச்சியாக காவடி மற்றும் பால் குடங்கள் ஊர்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    இக்கோயிலின் பங்குனித் திருவிழா கடந்த 16-ஆம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளுள் ஒன்றாக காவடி மற்றும் பால் குடங்கள் ஊர்வலம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று, அலகு காவடி, பால் குடங்கள் சுமந்து நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். விழாவில், அக்கினி கப்பரை வீதியுலா சனிக்கிழமை காலை நடைபெறுகிறது. மார்ச் 30-ஆம் தேதி திருவிளக்கு பூஜை மற்றும் ஊஞ்சல் உத்ஸவம் நடைபெறுகிறது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai