Enable Javscript for better performance
ராமர் படத்தை அவமதித்தவர்களை தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    ராமர் படத்தை அவமதித்தவர்களை தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 24th March 2018 05:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் ஸ்ரீ ராமர் படத்துக்கு அவமரியாதை செய்தவர்களை தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
    இதுதொடர்பாக, இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜெ. சுவாமிநாதன், மாவட்டப் பொதுச் செயலாளர் ஆறு. பார்த்திபன்மற்றும் நிர்வாகிகள் நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் வெள்ளிக்கிழமை அளித்த மனு :
    புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்து, நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் கடந்த 20-ஆம் தேதி ஒரு சில அமைப்புகள் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில், இந்துக்களால் போற்றி வணங்கப்படும் ஸ்ரீராமபிரானின் படம் மிக மோசமாக அவமதிக்கப்பட்டுள்ளது.
    பெரியார் சிலை உடைப்புக்கும், ஸ்ரீராமபிரானுக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லாத நிலையில், ஸ்ரீ ராமபிரானின் படம் அவமதிக்கப்பட்டிருப்பது பெரும்பான்மை மக்களிடையே மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
    எனவே, இச்சம்பவத்தில் ஈடுபட்ட மீத்தேன் திட்ட எதிர்ப்பு இயக்க நிர்வாகி த. ஜெயராமன், தமிழர் உரிமை இயக்க நிர்வாகி சுப்பு. மகேசு, திராவிடர் விடுதலைக் கழக நிர்வாகி இளையராஜா உள்ளிட்ட 14 பேரை தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என அந்த மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai