Enable Javscript for better performance
ராமர் படம் அவமதிப்பு விவகாரம்: மயிலாடுதுறையில் கடையடைப்பு போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ராமர் படம் அவமதிப்பு விவகாரம்: மயிலாடுதுறையில் கடையடைப்பு போராட்டம்

    By DIN  |   Published on : 24th March 2018 01:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் ராமர் திருவுருவப் படம் அவமதிப்பு செய்யப்பட்டதைக் கண்டித்து, கடையடைப்புப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்து, மயிலாடுதுறையில் திராவிடர் விடுதலைக் கழகம், தமிழர் உரிமை மீட்பு இயக்கம், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் கடந்த 20-ஆம் தேதி போராட்டம் நடைபெற்றது. அப்போது, ராமர் திருவுருவப் படத்துக்கு அவமரியாதை செய்ததாகத் தெரிகிறது. இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸார், இப்போராட்டத்தில் ஈடுபட்ட 14 பேரை கைது செய்தனர்.
    இந்நிலையில், ராமர் திருவுருவப் படம் அவமரியாதை செய்யப்பட்டதற்கு, இந்து அமைப்புகளின் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
    மேலும், ராமரின் திருவுருவப் படத்தை அவமரியாதை செய்தவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி, வெள்ளிக்கிழமை (மார்ச் 23) கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது.இதையொட்டி, மயிலாடுதுறை பகுதியில் உள்ள 2000-க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் காலை முதல் நண்பகல் 12 மணி வரை அடைக்கப்பட்டிருந்தன. இதனால், பகல் நேரத்தில் கடை வீதிகளில் மக்கள் நடமாட்டம் குறைவாகக் காணப்பட்டது.
    இப்போராட்டம் காரணமாக, மயிலாடுதுறை பேருந்து நிலையம் மற்றும் பிரதான வீதிகளில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai