Enable Javscript for better performance
வலங்கைமானில் நாளை பாடைக் காவடி திருவிழா- Dinamani

சுடச்சுட

    

    வலங்கைமான் ஸ்ரீமகாமாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 25) பாடைக் காவடி திருவிழா நடைபெறவுள்ளது.
    வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலிலுள்ள அம்மன் சீதளாதேவி என்றழைக்கப்படுகிறார். இக்கோயிலில் பங்குனிப் பெருந்திருவிழா மார்ச் 18-ஆம் தேதி தொடங்கி நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் அம்மன் வீதியுலா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி, நாள்தோறும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
    விழாவின், முக்கியமான பாடைக் காவடி திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. நோயால் பாதிக்கப்படுபவர்கள் அதிலிருந்து விடுபட்டால் பாடைக் காவடி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்துவதாக வேண்டிக்கொண்டு அதன்படி நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். விழாவையொட்டி, சுகாதாரத் துறை, தீயணைப்புத் துறை, பேரூராட்சி நிர்வாகம் பல்வேறு சிறப்பு வசதிகளை செய்துள்ளது. சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளன. 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
    கோயில் வளாகத்தில் ஏற்கெனவே 8 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது திருவிழாவையொட்டி, கூடுதலாக 20 கேமராக்கள் முக்கிய இடங்களில் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai