Enable Javscript for better performance
வளாக நேர்காணலில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணை- Dinamani

சுடச்சுட

    

    மயிலாடுதுறை ஏவிசி தொழில்நுட்பக் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற வளாக நேர்காணலில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    கல்லூரியில் ஏற்கெனவே நடைபெற்ற வளாக நேர்காணலில் முன்னனி தனியார் நிறுவனங்களான பிரேக்ஸ் இந்தியா அருண் நெட்வொர்க்ஸ் லூகாஸ், டெல்பி ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் தங்களது நிறுவனத்தில் பணியாற்ற தகுதியான 191 மாணவர்களை தேர்ந்தெடுத்தனர். அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி கல்லூரி செயலர் கே. கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.
    இதில், அருண் நெட்வொர்க்ஸ் நிறுவன மனித வளம் மேம்பாட்டுத்துறை அலுவலர் அருண் பங்கேற்று பணி நியமன ஆணை வழங்கினார். கல்லூரி முதல்வர் கண்ணன், இயக்குநர் வளவன், வேலைவாய்ப்புத்துறை அலுவலர் ராஜேந்திரன், ஆசிரியை சீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai