Enable Javscript for better performance
வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைப்பு- Dinamani

சுடச்சுட

    

    சீர்காழியில் வாடகை செலுத்தாத 6 கடைகளுக்கு நகராட்சி அலுவலர்கள் வெள்ளிக்கிழமை பூட்டி சீல் வைத்தனர்.
    சீர்காழி பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்களில் நகராட்சிக்குச் சொந்தமான 133 கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. சில கடை உரிமையாளர்கள் வாடகை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில், சீர்காழி நகராட்சி நிர்வாகம் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு வியாழக்கிழமை விளக்கக் கடிதம் கொடுத்து வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்குள் வாடகை பாக்கியை செலுத்தவேண்டுமென்று இறுதி எச்சரிக்கை செய்தனர். பின்னர் 12 கடை உரிமையாளர்கள் நிலுவை வாடகை செலுத்தினர். மீதமுள்ள 6 கடை உரிமையாளர்கள் வாடகை செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.
    இதையடுத்து, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு மேலாளர் ஆனந்தராஜ், பணி மேற்பார்வையாளர் பாலசுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளர் முத்துகிருஷ்ணன், துப்புறவு மேற்பார்வையாளர் வீரப்பன் உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட முடித்திருத்தும் கடை, தையல் கடை, கடிகார விற்பனைகடை, பெட்டிகடை, தேநீர் கடை, மெக்கானிக் கடை உள்ளிட்ட 6கடைகளை பூட்டி சீல் வைத்துவிட்டு, சீர்காழியில் நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள வாடகை செலுத்தாத கடைகள் அடுத்தடுத்து பூட்டி சீல் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்று எச்சரிக்கை விடுத்து சென்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai