Enable Javscript for better performance
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து: வீடுகளில் கருப்புக் கொடி கட்டி எதிர்ப்பு- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து: வீடுகளில் கருப்புக் கொடி கட்டி எதிர்ப்பு

    By DIN  |   Published on : 31st March 2018 07:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி விவகாரத்தில், மத்திய அரசைக் கண்டித்து, சீர்காழியில் பாட்டாளி மக்கள் கட்சியினர் தங்களது வீடுகளில் வெள்ளிக்கிழமை கருப்புக்கொடி கட்டி எதிர்ப்புத் தெரிவித்தனர்.
    உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த 6 வார கால அவகாசம் வியாழக்கிழமையுடன் முடிவடைந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், காவிரிப் பிரச்னைக்குத் தீர்வு காணக்கோரி, பாமக நிறுவனர் ராமதாஸ் திண்டிவனம் தைலாபுரத்தில் உள்ள தனது வீட்டின் முன்பு கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தினார். இதேபோல், சீர்காழியில் பாமக மாவட்டத் துணைச் செயலாளர் முரளிராஜ், நகரச் செயலாளர் பி.எஸ். குமார், நகரத் தலைவர் சிவா, பொறுப்பாளர் துரை. சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் தங்களது வீட்டின் முன்பு கருப்புக்கொடி கட்டி  மத்திய அரசுக்கு எதிர்ப்பைப் பதிவு செய்தனர். அத்துடன், நகரின் பிரதான பகுதியில் உள்ள பாமக கொடிக் கம்பத்திலும் கட்டப்பட்டிருந்தது. 
    மயிலாடுதுறையில்...
    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடு முடிந்துள்ளது. ஆனாலும், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், பாமகவினர்  மயிலாடுதுறை, மணல்மேடு, செம்பனார்கோவில், சித்தர்க்காடு ஆகிய பகுதிகளில் வீடுகளில் கருப்புக் கொடியேற்றி எதிர்ப்பை  வெளிப்படுத்தினர். இதேபோல், குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய வட்டங்களிலும் பாமக சார்பில் வீடுகளில் கருப்புக் கொடியேற்றி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai