Enable Javscript for better performance
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சமாஜவாதி கட்சி வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சமாஜவாதி கட்சி வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 31st March 2018 07:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என சமாஜவாதி கட்சி வலியுறுத்தியுள்ளது.
    சீர்காழியில் வியாழக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. 
    காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க மத்திய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும், தமிழக சட்டப் பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த வேண்டும், காவிரி டெல்டா மாவட்டத்தில் பெட்ரோலிய ரசாயன மண்டலம் அமைக்கும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும், ஏப்ரல்15-ஆம் தேதி சென்னை வியாசர்பாடியில் நடைபெறவுள்ள சமாஜவாதி கட்சி மாநில பிரதிநிதிகள் மாநாட்டில் திரளாக  பங்கேற்பது, கொள்ளிடத்தில் தடுப்பணை கட்ட வலியுறுத்தி போராடும் விவசாயிகள் மற்றும் அமைப்புகளுக்கு சமாஜ்வாடி கட்சி ஆதரவை அளிப்பது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
    கட்சியின் மாநில இளைஞரணி பொதுச் செயலர் பா. கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாநில தலைவர் இளங்கோ யாதவ், வடக்கு மாவட்டச் செயலர் முருகன், மாவட்ட இளைஞரணித் தலைவர் தணிகைவேல், இளைஞரணி செயலர் ஜானகிராமன், மாவட்டத் தலைவர் சந்தானம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai